திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 26 ஆயிரத்து 160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 26 ஆயிரத்து 160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 26 ஆயிரத்து 160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி தலைமை தாங்கினார். கலெக்டர் வினித் முன்னிலை வகித்தார்.
முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
26,160 பேர் எழுதுகிறார்கள்
பிளஸ்-2 தேர்வுகள் வருகிற 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.
பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியைமேற்கொள்ள உள்ளனர்.
பறக்கும் படை
பிளஸ்-1 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள், 214 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 106 தலைமை ஆசிரியர்கள், 106 துறை அலுவலர்கள், 1,780 அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.