பா.ம.க. ஆலோசனை கூட்டம்


பா.ம.க. ஆலோசனை கூட்டம்
x

பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்ட பா.ம.க. ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் காடுவெட்டி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்திற்கு சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க வருகிற 13-ந் தேதி ஜெயங்கொண்டம் நகருக்கு அன்புமணி ராமதாஸ் வருகை தருகிறார். அவருக்கு சிறப்பான முறையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் வைத்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பா.ம.க. தலைவர் சின்னதுரை, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம பிரகாஷ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செந்தில், ஜெயங்கொண்டம் நகர பா.ம.க. செயலாளர் பரசுராமன், முன்னாள் நகர செயலாளர் மாதவன் தேவா உள்ளிட்ட பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story