பா.ம.க. ஆலோசனை கூட்டம்
பா.ம.க. ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் காளிதாசன், மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கி நாதன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் மாஸ்டர் மணி, நகர செயலாளர் எபினேசர் ஆகியோர் வரவேற்றனர்.
சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படும் அதிகப்படியான வரியை குறைக்க வேண்டும். ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சாலை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மகளிர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள ராமசாமிபுரம் ஊராட்சியில் சேதமான ஓடையை சீரமைக்க வேண்டும். ராஜபாளையம் ரெயில் நிலையத்தின் நடை மேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.