பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம்


பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம்
x

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி முதல் - அமைச்சருக்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலை

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரும், நீதிபதியுமான வீ.பாரதிதாசன் ஆகியோருக்கு கீழ்பென்னாத்தூர் நகர, ஒன்றிய பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் முன்பு நடந்தது.

கீழ்பென்னாத்தூர் நகர பா.ம.க. செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி வரவேற்றார். இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் கலந்துகொண்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story