காமலாபுரம் பிரிவு ரோடு அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரதம்


காமலாபுரம் பிரிவு ரோடு அருகே  மதுக்கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரதம்
x

காமலாபுரம் பிரிவு ரோடு அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சேலம்

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காமலா புரம் பிரிவு ரோடு அருகே நாலுகால் பாலம் செல்லும் ரோட்டில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதன் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி, வணிக வளாகங்கள், தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மதுபானக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வந்தவர்களை கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட அமைப்பு தலைவர் குமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன், வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாபு, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், துணைச்செயலாளர் குமார், மாவட்ட தொழிற்சங்க தலைவர் பழனிசாமி மற்றும் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், மேச்சேரி ஆகிய ஒன்றியங்களின் கட்சி செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், நகர தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story