பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்


பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
x

போளூரில் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே கேளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலாயுதம் வரவேற்றார்.

கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் கடிதம் அனுப்புவது. அனைத்து கடைகளிலும் பெயர் பலகை தமிழில் வைக்க அன்போடு கூறுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் போளூர் நகர செயலாளர் கே.சி.குமரன், ஒன்றிய செயலாளர் துரைராஜ், விஜயன், பாபு, தினேஷ், பரத், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


Next Story