பா.ம.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா


பா.ம.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
x

ஆற்காடு அருகே பா.ம.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் கணியனூர் கிராமத்தில் பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் நாளையொட்டி கட்சி கொடி ஏற்றுதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகள் நட்டு அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட தலைவர் ஆறுமுகம், பொருளாளர் அமுதா, மாநில பசுமை தாயகம் செயலாளர் டி.டி.மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம,் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பகவான் கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விக்ரமன், சரவணன், திருமணி, வெங்கடேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதே போல் திமிரி ஒன்றியத்தில் உள்ள இருங்கூர், சிவபுரம் மற்றும் ஆற்காடு ஒன்றியத்தில் சாத்தூர் ஆகிய கிராமங்களில் பா.ம.க கட்சி கொடி ஏற்றி மரக்கன்றுகள் நட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story