பாட்டாளி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு பாட்டாளி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் வேலூரை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க பொதுச்செயலாளர் வி.சி.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தலைவர் தயாகார்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் டோஜோ வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், மாநில துணைத்தலைவர் என்.டி.சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் பாபி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.
தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.