பாபநாசம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர் 'போக்சோ' வழக்கில் கைது


பாபநாசம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ வழக்கில் கைது
x

பாபநாசம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நேரு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது48). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு சம்பவத்தன்று 13 வயது சிறுவன், பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அபூபக்கர், அந்த சிறுவனை கடைக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அந்த சிறுவன் அலறியடித்து கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினான். இதையடுத்து சிறுவனின் தாய் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபூபக்கரை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story