சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போக்சோ சட்டத்தில் கைதான 2 கைதிகள் சாவு


சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போக்சோ சட்டத்தில் கைதான 2 கைதிகள் சாவு
x

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போக்சோ சட்டத்தில் கைதான 2 கைதிகள் உயிரிழந்தனர்.

சென்னை

சென்னை அம்பத்தூர் அடுத்த கோட்டூர் சூர்யா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 82). இவர், மயிலாப்பூர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மூளையில் கட்டி இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கைதி மாணிக்கம் உயிரிழந்தார். இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40). இவரும், ேபாக்சோ சட்டத்தில் பண்ருட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த ராஜீவ்காந்தி, கடந்த மாதம் 14-ந் தேதி சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கைதி ராஜீவ்காந்தி உயிரிழந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து இருவரும் ேநாய்வாய்ப்பட்டு அதனால்தான் இறந்தார்களா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்.


Next Story