போக்சோவில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49). தொழிலாளி. இவர் அவரது நண்பரின் மகளான 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் நண்பரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் மங்களேஸ்வரி ஆகியோர் ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story