விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி


விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி
x

பேரளம் அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

திருவாரூர்

நன்னிலம்;

பேரளம் அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

விஷ வண்டுகள் கடித்தன

திருவாரூர் மாவட்டம பேரளம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(வயது50), கீர்த்திவாசன்(50), சோமசுந்தரம்(80) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். குமாரக்குடி அருகே இவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு கூடு கட்டியிருந்த விஷவண்டுகள் 3 பேரையும் கடித்தன.

பரிதாப சாவு

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந் நிலையில் நேற்று ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கீர்த்திவாசன், சோமசுந்தரம் ஆகிய 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story