விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
x

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, முருக்கன்குடிநடுத்தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65), விவசாயி. இவருக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் (60) இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னசாமி கடந்த 27-ந்தேதி மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சின்னசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story