விஷ தேனீக்கள் தீ வைத்து அழிப்பு


விஷ தேனீக்கள் தீ வைத்து அழிப்பு
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஷ தேனீக்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் விஷ தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. மேலும் அவ்வப்போது வீட்டில் இருப்பவர்களை தேனீ கொட்டி காயப்படுத்தி உள்ளது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் கூடு கட்டி இருந்த தேனீக்களை தீப்பந்தம் மூலம் அழித்தனர்.


Next Story