வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
திருப்பூர்


கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவி மாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 9-நதேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த மாணவி ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த தீனதயாளன்(20) என்பவருடன் இருப்பது தெரியவந்தது.

கைதுவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தீனதயாளன் அந்த மாணவியை காதலித்ததாகவும் கடந்த 9-ந்தேதி கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டு சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த தீனதயாளனை போக்சோ சட்டத்தில் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story