சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவர்   போக்சோ சட்டத்தில் கைது
x
திருப்பூர்


கடந்த வாரம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் உடுமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி என்பது தெரிய வந்தது.இதனை அடுத்து உடுமலை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரை உடுமலையை அடுத்த கொடிங்கியம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தினேஷ்குமார் (வயது 22) ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் அவரை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story