கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா


கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
x
தினத்தந்தி 6 July 2023 1:30 AM IST (Updated: 6 July 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடந்தது.

தேனி

பெரியகுளம் தென்கரை கடைவீதி பகுதியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் கம்பம் நடும் விழாவும், சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக பெரியகுளம் வடகரை பகுதியில் இருந்து கம்பம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story