செல்வராஜ் எம்.எல்.ஏ. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமிநகரில் உள்ள பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து செல்வராஜ் எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டை கண்டித்து பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் சில இந்து அமைப்பினர் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) இந்து அமைப்புகள் சார்பில் செல்வராஜ் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக கொங்குநகரில் உள்ள செல்வராஜ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிவாசல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் பள்ளிவாசல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.