திருப்பூர் மாநகரில் 900 போலீசார் பாதுகாப்பு


திருப்பூர் மாநகரில் 900 போலீசார் பாதுகாப்பு
x
திருப்பூர்


பெட்ரோல் குண்டு வீச்சால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க திருப்பூர் மாநகரில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் பயணிகளிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

900 போலீசார்

திருப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் கல்வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா பிரமுகர் ஏற்கனவே குடியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பா.ஜனதா பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள், அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மாநகர் முழுவதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருப்பது போலீஸ் அதிகாரிகளை கலக்கமடைய செய்துள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாநகரம், திருப்பூர் மாவட்ட பயிற்சி போலீசார், எஸ்.டி.எப். போலீசார், உள்ளூர் போலீசார் என மொத்தம் 900 போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு

ரெயில் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையத்து வரும் பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர். அதுபோல் மாநகருக்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன ரோந்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்து, முஸ்லிம் அமைப்பினரிடமும் கூட்டம் நடத்தி எந்த சம்பவமாக இருந்தாலும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

---------

திருப்பூர் மாநகரில் 900 போலீசார் பாதுகாப்புதிருப்பூர் மாநகரில் 900 போலீசார் பாதுகாப்பு


Next Story