ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை


ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை
x

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

பட்டாசு

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதன் காரணமாக பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளன.

தொலைதூர பயணத்துக்கு ரெயில் பயணம் மிகவும் வசதியாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ரெயிலில் செல்கின்றனர். இதற்கிடையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

எச்சரிக்கை

இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிக ரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என போலீசார் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு, வெடி பொருட்கள் ஏதேனும் உள்ளதா என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் ஏறி சோதனை செய்து வருகின்றனர். பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story