வேப்பனப்பள்ளி அருகே வாஜ்பாய்க்கு நினைவு மண்டபம் அமைக்க பூமிபூஜை-போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவு மண்டபம் அமைக்க பூமிபூஜை நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் உரிய அனுமதியின்றி மணிமண்டபம் கட்டக்கூடாது என்று தெரிவித்து, பூமிபூஜையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் அறிவுரையை ஏற்று, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் முரளிதரன் மற்றும் பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story