ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் போலீஸ் பணிக்கான தேர்வை 4,657 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த போலீஸ் பணிக்கான தேர்வினை 4 ஆயிரத்து 657 பேர் எழுதினர்.
ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த போலீஸ் பணிக்கான தேர்வினை 4 ஆயிரத்து 657 பேர் எழுதினர்.
3 மையங்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை போலீசார், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி இந்த தேர்வு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் நடந்தது.
இந்த தேர்வினை எழுத ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 957 பெண்களும், 4 ஆயிரத்து 963 ஆண்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 920 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு தே்ாவு எழுதுவதற்கான நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நுழைவு சீட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கே வரத் தொடங்கினர்.
1,263 பேர் எழுதவில்லை
தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
இதில், தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு சம்பந்தமாக 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.
தேர்வு நடந்த அறைகளில் கண்காணிப்பு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தேர்விற்கு விண்ணப்பித்ததில் 1,263 பேர் தேர்வு எழுத வரவில்லை. 4 ஆயிரத்து 657 பேர் போலீஸ் பணிக்கான தேர்வை எழுதினார்கள். 79.4 சதவீத ஆண்களும், பெண்கள் 75.8 சதவீத பெண்களும் இந்த தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.