ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
ஈரோடு
கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, துப்பறியும் நாய் படை பிரிவு, தனிப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, நக்சல் தடுப்பு பிரிவு ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், நிலுவைக்கான காரணம், வழக்குகளை கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கேட்டறிந்து, கோர்ட்டு வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story