ரெயில் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
அரக்கோணம் ரெயில் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் தலைமையிலான போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், பிளாட்பாரம் மற்றும் தண்டவாளங்களில் தீவிர சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்கானித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story