சாத்தான்குளம் அருகே போதை மாத்திரைகள் கொடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகே போதை மாத்திரைகள் கொடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே போதை மாத்திரைகள் கொடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே போதை மாத்திரைகள் கொடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மாணவர்களிடம் போதை மாத்திரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கள அலுவலர்கள் ராமலட்சுமி, வேல்முருகன் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று மாணவர்களிடம் விசாரித்தனர்.

வாலிபர் கைது

இதில், சாத்தான்குளம் அருகே துவர்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் செல்வன் (வயது 26) என்பவர் கடந்த சில மாதங்களாக 2 மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து மிரட்டி பாலியல் தொல்லையில் (ஓரினச்சேர்க்கை) ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வனை நேற்று முன்தினம் கைது செய்தார். பின்னர் அவரை சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story