ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் தாக்குதல்


ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் தாக்குதல்
x

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

திருவாரூர்

திருவாரூரில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது வாலிபர் ஒருவரை போலீசார் வழிமறித்தனர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் போலீசாரிடம், 'தைரியம் இருந்தா ஒயின்ஷாப்பை மூட சொல்லு, முடியாது ஏன்னா அது கவர்மெண்ட் கடை' என கூறி தகாத வார்த்தைகளால் போலீசாரை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு மக்கள் வேடிக்கை பார்க்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசார் வைத்திருந்த லத்தியை பிடுங்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போலீசார் வேறு வழியின்றி வாலிபரை தாக்கி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனிடையே வாலிபர் ரகளையில் ஈடுபட்டது, அவரை போலீசார் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.


Next Story