மீன்சந்தைகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குலசேகரன்பட்டினம் பகுதியில் மீன்சந்தைகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீன் சந்தைகளில் பெண்கள் உட்பட பொதுமக்களிடமும் 'மாற்றத்தை தேடி' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story