நாகர்கோவிலில் போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்களை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட போலீஸ் ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.
பேரணி பீச்ரோடு, செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம் வழியாக பார்வதிபுரம் வரை சென்றடைந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
ஆலோசனை கூட்டம்
பின்னர் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் போடப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனையை தடுப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கி பாராட்டினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி புலன் விசாரணையை திறன்பட நடத்திய போலீசாருக்கும் பராாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், வேல்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.