சாணார்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்கு


சாணார்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்கு
x

சாணார்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று வேம்பார்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், போலீசார் வருவதை கண்டதும் சேவல்களுடன் தப்பிஓடிவிட்டனர். இருப்பினும் அவர்கள் விட்டுச்சென்ற 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சேவல் சண்டை நடத்தியவர்கள், சாணார்பட்டி அருகே உள்ள மொட்டயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 22), ஜோத்தாம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (25), மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி (26) உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story