ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை


ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை
x

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு நாடெங்கும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் கொண்டு வரும் உடமைகள் மெட்டர் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து வெளிமாநில ெரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடமைகளை சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.


Next Story