இந்துக்கள் பற்றி அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது போலீசில் புகார்
இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க தலைவர் சுப்பிரமணியன், சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், இந்து பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பின்னர் சுப்பிரமணியன் கூறுகையில், 'இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்கரன்கோவிலில் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது' என்றார். அப்போது சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story