காரில் சிலிண்டர் வெடித்த எதிரொலி: குமரி- கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை

காரில் சிலிண்டர் வெடித்த எதிரொலி: குமரி- கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x

காரில் சிலிண்டர் வெடித்த எதிரொலியால் குமரி- கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

காரில் சிலிண்டர் வெடித்த எதிரொலியால் குமரி- கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

சோதனை

கோவையில் காரில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி-கேரள எல்லையில் களியக்காவிளை, கோழிவிளை, கண்ணுமாமூடு, புலியூர்சாலை, நெட்டா போன்ற பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. வாகனங்களில் வருபவர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்து, சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையால் குமரி எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story