மங்களூரு சம்பவம் தொடர்பாக போலீசார் திடீர் வாகன சோதனை
மங்களூரு சம்பவம் தொடர்பாக போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
ராணிப்பேட்டை
மங்களூரு சம்பவம் தொடர்பாக போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற பகுதியில் ஆட்டோவில் இருந்த மர்மபொருள் ஒன்று வெடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்திலும் திடீர் வாகன சோதனை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியில் இன்ஸ்பெக்டர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். இதனால் நேற்று நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story