நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை


நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை
x

நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி

குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இயக்குனர் ஆபாஷ்குமார், மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின்பேரில், நெல்லை துணை சூப்பிரண்டு முத்துகுமார் தலைமையில் போலீசார், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் முறைகேடாக நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனரா?, அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து கண்காணித்தனர்.


Next Story