திருவட்டாரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திருவட்டாரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x

திருவட்டாரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டாரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு

ஆற்றூர், திருவட்டார், புளிமூடு பகுதிகளில் திருவட்டார் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

அதாவது, ஹெல்மெட் அணியாமல் பின்னால் உட்கார்ந்திருப்பவரிடமும் அபராதம் விதிக்கப்படும். புதிய அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சாலை விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இந்த சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட்ராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story