போலீசாரின் குறைகளை கேட்டறிந்த கமிஷனர்


போலீசாரின் குறைகளை கேட்டறிந்த கமிஷனர்
x

போலீசாரின் குறைகளை கேட்டறிந்த கமிஷனர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகர ஆயுதப்படை மற்றும் மாநகர காவல் ஆணையரக வாகனப்பிரிவின் வருடாந்திர ஆய்வு நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பங்கேற்று, ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மிடுக்கான சீருடை அணிந்து மேற்கொண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கவாத்து பயிற்சியை கமிஷனர் ஆய்வு செய்தார்.

பின்னர் இருசக்கர, நான்கு சக்கர ரோந்து வாகனங்களை ஆய்வு செய்து அவற்றின் நிலை குறித்த கேட்டறிந்தார். போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். துணை கமிஷனர் வனிதா மற்றும் ஆயுதப்படை கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story