தமிழகத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு ,போலீசார் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடலூர்,திருப்பத்தூர்,வேலூர்,திண்டுக்கல் ,திருச்சி,ராமநாதபுரம்,தென்காசி ,புதுக்கோட்டை,திருவாரூர்,திருவள்ளூரில் போலீசார்அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story