திருப்பூர் மாவட்ட சிறையில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு


திருப்பூர் மாவட்ட சிறையில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு
x

திருப்பூர் மாவட்ட சிறையில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெண்கள் சிறையிலும் அவர் ஆய்வு செய்தார்.

சிறைத்துறை டி.ஜி.பி. ஆய்வு

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நேற்று திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சிறையில் 130 கைதிகள் உள்ளனர். சிறைக்கைதிகளிடம் போதைப்பொருள், செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் பயன்பாட்டில் உள்ளதா?, சிறையில் கைதிகளின் நிலை, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது கோவை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முசுந்தரம், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, திருப்பூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பெண்கள் சிறை

இதைத்தொடர்ந்து நல்லூரில் மாவட்ட பெண்கள் இணைப்பு சிறைக்கு சென்று டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார். அங்கு 8 பெண் கைதிகள் உள்ளனர். அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அருகில் சிறைத்துறை ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்புக்கும் சென்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை, ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.




Next Story