இந்திய வனப்பணிக்கு தேர்வானவருக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
இந்திய வனப்பணிக்கு தேர்வானவருக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி குருசாமி-முனியம்மாள் தம்பதி மகன் சுப்புராஜ் (வயது 27). இவர் கடையநல்லூரில் ரத்னா உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரையிலும், பின்னர் ஹிதாயத் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரையிலும் படித்தார்.
தொடர்ந்து கோவையில் பொறியியல் படித்து விட்டு, கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசின் வனவர் தேர்வில் வெற்றி பெற்று, சாத்தான்குளத்தில் வனவராக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று இந்திய வனப்பணிக்கு அதிகாரியாக தேர்வானார். இதையடுத்து சுப்புராஜை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
Related Tags :
Next Story