கோழி திருடர்களை பிடிக்கஉதவியபெண்ணுக்குபோலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு


கோழி திருடர்களை பிடிக்கஉதவியபெண்ணுக்குபோலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கோழி திருடர்களை பிடிக்க உதவிய பெண்ணுக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கோழி திருடர்களை பிடிக்க உதவிய பெண்ணுக்கு போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோழி திருடர்கள்

கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் கண்ணன் மனைவி லாவண்யா (வயது 31). இவரது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் 3 கோழிகளை திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பந்தமான காட்சிகள் லாவண்யா வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை எதிர்வீட்டுக்காரரிடம் அவர் காட்டியதன் பேரில், கோழி திருடியவர்களை கண்டுபிடித்துள்ளார். பின்னர் இருதரப்பினரும் சமரசமாக பேசி முடித்துக்கொண்டனர்.

திருடர்கள் தகராறு

இந்நிலையில் கோழி திருடிய கும்பல் கடந்த 24-ந் தேதி அதிகாலையில் லாவண்யா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து லாவண்யா மற்றும் அவரது தாயாரிடம் கேமரா பதிவுகளை எப்படி எதிர்வீட்டுக்காரரிடம் கொடுக்கலாம்? என்று கூறி அவதூறாக பேசியதுடன், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

6 பேர் சிக்கினர்

இதுகுறித்து கேமரா பதிவுகளுடன் லாவண்யா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தினர். இதில் கோழி திருடர்களான கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர், சங்கிலி பாண்டி மகன்கள் பொன்பாண்டி (21), மற்றும் சங்கிலி பாண்டி (25), செண்பகராஜ் மகன் மருதுபாண்டி ( 26), கோவில்பட்டி இடைசெவல் பகுதியைச் சேர்ந்த கொண்டையப்பன் மகன் நாகராஜ் (எ) விஷ்ணு (23) மற்றும் அத்தை கொண்டான் செல்வராஜ் மகன் பூபேஷ் ( 20) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் 2 மோட்டார் ைசக்கிளும் பறிமுதல் செய்தனர்.

டி.ஜி.பி. பாராட்டு

திருடர்களை பிடிக்க துணிச்சலாக கேமரா பதிவுகளை போலீசாரிடம் ஒப்படைத்த லாவண்யாவை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரை தூத்துக்குடி அலுவலகத்துக்கு வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story