போலீசார் ரத்ததானம்


போலீசார் ரத்ததானம்
x

பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ரத்ததானம் செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தார். தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர் மற்றும் மாநகர, மாவட்ட போலீசார் 100 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் சான்றிதழ் வழங்கினார்.


Next Story