போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x

கோத்தகிரி, குன்னூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காவல்துறை சார்பில், கோத்தகிரியில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமை தாங்கினார். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதேபோல் குன்னூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சிம்ஸ் பூங்கா பகுதியில் தொடங்கி பெட்போர்டு, லாலி ஆஸ்பத்திரி கார்னர், மவுண்ட் ரோடு வழியாக பஸ் நிலையம் வரை அணிவகுப்பு நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். இதில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story