போலீசார் கொடி அணிவகுப்பு
செய்யாறில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
திருவண்ணாமலை
செய்யாறு
செய்யாறு டவுனில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
செய்யாறு துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 போலீசார் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலை முன்பு தொடங்கிய அணிவகுப்பு காந்தி சாலை, காசிக்கார தெரு, பங்களாத்தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோனேரிராயன் குளக்கரையில் நிறைவு பெற்றது.
சேத்துப்பட்டு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் 43 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தேவிகாபுரத்தில் 10 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக தேவிகாபுரம் முக்கிய வீதிகளில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
Related Tags :
Next Story