ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு


ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காவல்துறை சார்பில், ஊட்டியில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமை தாங்கினார். ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மத்திய பஸ் நிலையம் வரையும், காந்தல் முக்கோணம் முதல் பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரையும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் கலந்துகொண்டனர்.



Next Story