விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு


விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

திருப்பத்தூர் உட்கோட்ட அளவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பத்தூரில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார்.

கொடி அணி வகுப்பு தூய நெஞ்சக்கல்லூரியில் இருந்து தொடங்கி நகரின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் பிரதான சாலைகளின் வழியாக சென்று புதுப்பேட்டை சாலை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுத்து சென்றனர்.


Next Story