டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது


டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது
x

நெல்லை சந்திப்பில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதால் அங்கு உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பு ரெயில் நிலையத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போதுங்கனி (வயது 58) என்பவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அரசு பஸ்கள் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்வதால் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இனி நீங்கள் ரெயில் நிலையத்துக்குள் வரக்கூடாது என்று கூறி போதுங்கனியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் போதுங்கனியை குத்த முயன்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு காவலரான வேல்முருகன் அங்கு சென்றார். அவரை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். வேல்முருகன் அவரை விடாமல் துரத்தி சென்று பிடித்தார். பின்னர் அவரை நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வகுமார் (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், செல்வகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story