போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திருவண்ணாமலை

ஆரணி

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஆரணி நகர போலீஸ் நிலையம், ஆரணி வட்டார போக்குவரத்து துறை ஆகியவை இணைந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. ஆரணி நகர போலீஸ் நிலையம் அருகிலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் பேரணி தொடங்கியது.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன் (ஆரணி) கருணாநிதி (செய்யாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரகு ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி கோட்டை தெரு, பழைய பஸ் நிலையம் வழியாக காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, சூரிய குளம் கார்த்திகேயன் ரோடு வழியாக நகராட்சி சாலை வழியாக மீண்டும் நகர போலீஸ் நிலையம் அருகில் நிறைவு பெற்றது.

பேரணியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனங்கள் அணிவகுத்து சென்றது. இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story