போலீசார் ஆய்வு கூட்டம்
நெல்லையில் போலீசார் ஆய்வு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில், நீதிமன்றங்களுக்கு செல்லும் போலீசாருடனான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், முக்கிய கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, போக்சோ போன்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறிப்பிட்ட நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story