தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார் கண்ணாடி உடைப்பு


தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார் கண்ணாடி உடைப்பு
x

தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர் சகாயமாதாபட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தாராம். இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென போலீஸ் காரின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

இது குறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story