போலீசார் தீவிர வாகன சோதனை
தமிழக - கேரள எல்லையில் புளியறை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
கேரள மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு தரப்பு மக்களும் இதனை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்தநிலையில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலை போன்றவற்றை தமிழகத்திலிருந்து சமூகவிரோதிகள் கடத்தி செல்வதை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் புளியரை சோதனைச்சாவடியில் செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி மற்றும் போலீசார் கேரள மாநில கலால் குழுவுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சோதனையில் மோப்ப நாயும் இடம் பெற்றுள்ளது.
மேலும் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இரு மாநிலங்களுக்கிடையே இடம் மாறுவதையும் இந்த சோதனையில் கண்காணிக்கப்படுகிறது.